ETV Bharat / bharat

நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல் - நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து சம்மதம்

nirav modi
நிரவ் மோடி
author img

By

Published : Apr 16, 2021, 8:22 PM IST

Updated : Apr 16, 2021, 10:31 PM IST

19:32 April 16

டெல்லி: இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பியோடிய நிலையில், அவரை நாடு கடத்த அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சட்ட விரோத பணபரிவர்ததனை, பணமோசடி செய்ததாக குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற நீரவ் மோடி, பின்னர் நாடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. 

நீரவ் மோடி மீதான புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தியாவில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அவருக்கு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அத்துடன், நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசால் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு  உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளிலும் நீரவ் மோடிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில், விரைவில் அவர் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளார். 

==

இதையும் படிங்க: இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து வெளியேறும் சிட்டி வங்கி!

Last Updated : Apr 16, 2021, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.