புது டெல்லி : நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மாணவ- மாணவியர் படிப்பை முடித்த 6 மாதங்களில் பட்டம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) அறிவுறுத்தியுள்ளது.
பட்டப் படிப்பை பெறும் மாணவர் கல்வியில் வேலை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை போக்க யுஜிசி இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த உத்தரவை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாவண- மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் பட்டப் படிப்பை 4 ஆண்டுகளாக குறைத்த நிலையிலும் நுழைவுத் தேர்வையும் அறிமுகப்படுத்தி, உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் படிப்பை முடித்த 180 நாள்களில் (அதாவது 6 மாதம்) பட்டம் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் செயற்கை முழங்கால் அறிமுகம்