உடுப்பி (கர்நாடகம்): கடந்த 40 மணிநேரத்தில் டாக் டே புயலின் காரணமாக நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள் ஒன்பது பேர் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கப்பு கலங்கரை விளக்கம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 13 நாட்டிகல் மைல் தொலைவில் படகில் இவர்கள் தத்தளித்து வந்துள்ளனர். இவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்டவர்கள் முல்லா கான், கெளரவ் குமார், சாந்தனு, அகமது ராகுல், தீபக், பிரசாந்த், துஷார், லக்ஷ்மி நாராயணா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.