பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள அட்டாரி எல்லைக்கு அருகே வசிக்கும் விவசாயி ஒருவர் அக்.28ஆம் தேதி தனது வயல் வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது வயலில் ஒரு பெரிய பொட்டலம் கிடப்பதை பார்த்துள்ளார். அதனை பிரித்து பார்த்தபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் அங்கு விரைந்த பிஎஸ்எப் அலுவலர்கள் பொட்டலத்தை சோதனையிட்டனர்.
அப்போது அது 1 கிலோ எடைக்கொண்ட ஹெராயின் போதைப்பொருள் என்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 7 கோடி ரூபாய் ஆகும். இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஹெராயின், பரிசோதனைக்காக ஆய்வத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், இந்த ஹெராயின் பொட்டலம் பாகிஸ்தான் கடத்தல்காரர்களின் ஆளில்லா விமானம் மூலம் இறக்கி விடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற ஆளில்லா விமானங்கள் அடிக்கடி அமிர்தசரஸ் எல்லைக்குள் வருவதாகவும், அவ்வப்போது சில ஆளில்லா விமானங்கள் பிஎஸ்எப் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகிறது என்றும் பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சோபியானிலிருந்து ஜம்முவுக்கு படையெடுக்கும் பண்டிட் குடும்பங்கள்