உதய்பூர்: உலக வெப்பமயமாகுதலை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புவி வெப்பமயமாகுதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய உதய்பூர் இளவரசர், தொடர்ந்து 7வது முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
உதய்பூர் அரசு குடும்பத்தைச் சேர்ந்த மகாராஜ் லக்சயராஜ் சிங் மேவார், உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் எதிர்காலத்தின் விதைகள் என்ற திட்டத்தின் மூலம் 40 நிமிடங்களில் 21 ஆயிரத்து 58 மரக்கன்றுகளை நட்டுள்ளார். இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக மரக் கன்றுகள் நட்டதாக கின்னஸ் சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உதய்பூர் இளவரஷர் லக்சயராஜ், 7-வது முறையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ள உதய்பூர் இளவரசர் கடந்த 4 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சருக்கு தீவிர சிகிச்சை.. முதலமைச்சர் நவீன் பட்நாயக் கண்டனம்