தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ஊபர் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். சமீபத்தில் திருப்பதி கோயிலுக்குச் சென்ற ஸ்ரீகாந்த், சாமி தரிசனம்செய்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
பின்னர், வாகனத்தை இயக்கவந்த அவருக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஊபர் செயலியை இயக்கிட ஃபேஸ் ரெககனஷேசன் (Facial Recognition) அவசியமாகும். ஆனால், மொட்டை அடித்ததால் அவரை அச்செயலியால் ஸ்கேன் செய்திட இயலவில்லை.
நான்கு முறை முயற்சி செய்தும் ஆகாததால், அவரது கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. கடந்த ஓராண்டாக ஊபரில் வேலை செய்துவரும் ஸ்ரீகாந்த், 1400-க்கும் அதிகமான பயண சவாரிகளை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மொட்டையடித்ததால், என்னால் ஊபர் கணக்கை உபயோகிக்க முடியவில்லை. அடுத்த நாளே, ஊபர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அவர்கள், மாற்று ஓட்டுநர் மூலம் காரை இயக்க அறிவுறுத்தினர்.
எனக்கு அதில் விருப்பமில்லை. இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தேன். இறுதியாக, உயர் அலுவலரின் மின்னஞ்சலுக்குப் புகாரை அனுப்புமாறு மெயில் ஐடி கொடுத்தனர். இன்னமும், இப்பிரச்சினை தீரவில்லை" என்றார்.
இதையும் படிங்க: அமித் ஷா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் - நாராயணசாமி