ETV Bharat / bharat

தீபாவளி - வெடித்து சிதறிய பட்டாசுகள் - இருவர் உயிரிழப்பு

author img

By

Published : Nov 5, 2021, 12:05 PM IST

ஹைதரபாத்தில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

வெடி விபத்து  ஹைதரபாத் வெடி விபத்து  விபத்து  தீபாவளி  Blast at Hyderabad  one injured in Blast at Hyderabad  two were dead in Blast at Hyderabad
வெடி விபத்து

ஹைதராபாத் : பழைய நகரமான கண்டிகல் கேட் பகுதியில் உல்லாஸ் என்பவர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (POP) சிலைகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். நேற்று (நவ.4) தீபாவளி முன்னிட்டு தொழிற்சாலையில் பூஜை நடத்தப்பட்டது.

அப்போது, அந்த யூனிட்டில் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விஷ்ணு (25), ஜெகன் (30), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரேன் (25) ஆகியோரிடம் சில பட்டாசுகளை கொடுத்துவிட்டு உல்லாஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

மூவரும் நள்ளிரவில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விஷ்ணு மற்றும் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பிரேன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சத்ரிநாகா காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உஸ்மானியா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ. 4 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.