ETV Bharat / state

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ்; மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி! - laddu ghee issue - LADDU GHEE ISSUE

திருப்பதி லட்டு விவகாரத்தில் மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எதனடிப்படையில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது? எனவும், மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது. அதன் முடிவுகள் இதுவரை ஏன் வெளியிடவில்லை? என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 7:01 PM IST

மதுரை: திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், "திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல்முறையாக ஆய்வு செய்த பின்பு திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நிறுவனம் அனுப்பிய நெய்யை சோதனை செய்தபோது அதில் கலப்படம் (மாட்டுக் கொழுப்பு) இருப்பதாகக் கூறி குஜராத்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தங்கள் நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தடை (கருப்பு பட்டியல்) விதித்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் எங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முறையாக ஆய்வு செய்யாமல், தனியார் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல என்பதுடன் சட்டவிரோதமான நடவடிக்கையும் கூட. உரிய கால அவகாசம் வழங்காமல் மத்திய உணவுப் பாதுகாப்பு துறை செயல்படுகிறது. எனவே இந்த நோட்டீசை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தரப்பில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு விளக்கம் தர போதிய கால அவகாசம் வழங்கவில்லை.

மேலும், என்ன விதிமுறை மீறலில் நிறுவனம் ஈடுபட்டது என்பது குறித்து அதில் குறிப்பிடவில்லை. கடந்த செப் 29ம் தேதி நோட்டீஸ் அனுப்பி, அக்டோபர் 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஏற்கத்தக்கது அல்ல.

அதே நேரத்தில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அனுப்பி உள்ள சோதனை அறிக்கையில், எங்களது நிறுவனத்தின் நெய்யில் (மாட்டுக் கொழுப்பு கலந்ததாக) கலப்படம் இருப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை. குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் சோதனை அறிக்கையில் முரண்பாடு உள்ளது. இதேபோல் சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் சோதனை அறிக்கையிலும் நெய்யில் எந்தவித கலப்படமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு நிர்ணய ஆணையம் அனுப்பிய நோட்டீஸிற்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது நெய் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கால அவகாசம் இல்லை என்றால் மேலும் உரிய கால அவகாசம் வழங்க தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க : திருப்பதி லட்டு விவகாரம்: "ஆதாரம் எங்கே? கடவுள் விஷயத்தில் அரசியல் வேண்டாம்" - ஆந்திர அரசை சாடிய உச்ச நீதிமன்றம்

அப்பொழுது நீதிபதி சதீஷ்குமார், "ஏ.ஆர்.டெய்ரி புட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது? மேலும், எந்த வகை விதிமீறல் காரணமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது? தற்போது கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நோட்டீஸ்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாமல் தெளிவின்றி உள்ளது.

கடந்த செப்.29 ஆம் தேதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் விளக்க அளிக்க கோரினால் எப்படி விளக்க முடியும்? சம்மந்தப்பட்ட நிறுவனம் செய்த விதிமீறல் குறித்து கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை.

உணவுப்பாதுகாப்புத் துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது? ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் சென்னையில் உள்ள ஆய்வகம் கொடுத்த சோதனை அறிக்கையிலும், குஜராத் நிறுவனத்தின் அறிக்கையிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் ஆய்வக அறிக்கையிலும் கலப்படம் இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது அதுவும் அரசு நிறுவனம் தான். மேலும், மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது. அந்த சோதனையின் முடிவுகள் எங்கே? இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை?" என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

"இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. தற்போது இது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. எனவே, உச்ச நீதிமன்றம் கூறியது போல் அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவது தான் சரியாக இருக்கும்.

எனவே, ஏற்கெனவே அனுப்பிய மத்திய அரசின் நோட்டீஸ்களை தவிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புதிதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதற்கு உரிய 14 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும். அந்த உரிய கால அவகாசத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம்" எனக் கூறி, வழக்கு விசாரணையை முடித்து வைத்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.