நவீனமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் ஒரு மனிதரைப் பார்த்துவிட முடியாது. பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர்.
சில சமயம் இந்த செல்போன், மக்களின் உயிரையும் பறிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் செல்ஃபி மோகத்தால், பல உயிர்கள் பறிபோகின்றன.
அதுபோன்ற சம்பவம்தான் தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. குலு மாவட்டம் பாங்க் பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றிப்பார்பதற்காகச் சென்றனர்.
அப்போது செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறிவிழுந்து தாய், மகன் இரண்டு சுற்றுலாப் பயணிகள் ஆகிய நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யானைகளின் அருகே சென்று செல்ஃபி - எச்சரிக்கும் வனத்துறை