ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் உள்ள நர் காஸ் காட்டுப் பகுதியில் பயங்கவாதிகள் பதுங்கியிருந்ததாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜுனியர் கட்டளை அதிகாரியும், ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்தனர். தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் காரணமாக பிம்பர் காலி, சூரான்கோட் இடையே வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் இப்பகுதியில் மூன்று மாதத்திற்கும் மேலாக பதுங்கியிருக்கலாம் என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபகுதியில் நான்கு நாள்களுக்கு முன் நடைபெற்ற மோதலில் ஐந்து வீரர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: JEE Advanced 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு