ETV Bharat / bharat

தொடரும் பூஞ்சையின் ஆட்டம்... ஆபத்தா வெள்ளை பூஞ்சை!

சண்டிகர்: ஹரியானாவில் ஹிசார் சிவில் மருத்துவமனையில் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு காரணமாக, இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

white fungus
வெள்ளை பூஞ்சை
author img

By

Published : May 21, 2021, 1:42 PM IST

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் 4 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

covid
கோவிட் 19 அறிகுறிகள்

மியூகோர்மைகோசிஸ்

இதற்கிடையில், தற்போது பல்வேறு மாநிலங்களில் ’கறுப்பு பூஞ்சை நோய்’ பரவத் தொடங்கியுள்ளது. ’மியூகோர்மைகோஸிஸ்’ என்ற இந்த நோய், குறிப்பாக கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவந்த நபர்களை குறி வைக்கிறது.

fungus
கருப்பு பூஞ்சை நோய்

இந்த நோயில் பாதிக்கப்படுவர்கள், பலரின் உடல் பாகங்களை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இந்த கறுப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக, ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புயல் ஓய்வதற்குள், அடுத்ததாக 'வெள்ளை பூஞ்சை' ஆட்டம் இந்தியாவில் தொடங்கியுள்ளது. ஹரியானாவில் ஹிசார் சிவில் மருத்துவமனையில் இரண்டு கரோனா நோயாளிகளுக்கு வெள்ளை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதே போல, பாட்னாவில் 4 பேருக்கு இந்தப் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வெள்ளை பூஞ்சை அறிகுறிகள்:

வெள்ளை பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா அறிகுறிகளே இருக்கும். ஆனால், கரோனா பரிசோதனையில் அதனை கண்டுபிடிக்க முடியாது. வெள்ளை பூஞ்சை பாதிப்பை "சிடி ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே" மூலமாகதான் கண்டறிய முடிகிறது என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

white
புதிதாக தோன்றிய வெள்ளை பூஞ்சை

வெள்ளை பூஞ்சை நோய் நுரையீரலை தாக்குவது மட்டுமின்றி நகங்கள், தோல், வாய், வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுக்களையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

கரோனா நோயாளிகள் கவனத்திற்கு!

கோவிட்-19 நோயாளிகளுக்கு வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது நுரையீரலைப் பாதிக்கிறது மற்றும் கரோனா வைரஸைப் போன்ற அறிகுறிகளையும் உருவாக்குகிறது.

நீரிழிவு நோய், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதாக தாக்குகிறது. இந்த வெள்ளை பூஞ்சை நோய் கருப்பு பூஞ்சையை விட, பெரிதும் ஆபத்து என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.