ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் பகுதியில் உள்ள பனிச்சறுக்கு மையத்திலிருந்து வெநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் இரண்டு வழிகாட்டிகள் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் மீட்புப்படையினர், மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர். 19 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இரண்டு வழிகாட்டிகள் மீட்கப்பட்டனர்.
இறந்த வெளிநாட்டு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பனிச்சறுக்கில் சரியாக எத்தனை பேர் சிக்கினார்கள் என்பது தெரியவில்லை என்றும், தேடும் பணி தொடர்வதகாவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரசாயன டிரம்மில் பீடி கங்கு விழுந்து வெடி விபத்து.. 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..