ETV Bharat / bharat

பழங்குடியினப் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு, பிறப்புறுப்பை சிதைத்த 2 காவலர்கள் கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக தாக்கிய 2 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

Two policemen held for rape  brutalization of tribal woman in Lohardaga district

author img

By

Published : Oct 7, 2022, 5:59 PM IST

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது பழங்குடியினப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 2 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து லோஹர்தகா போலீசார் தரப்பில், லோஹர்தகா மாவட்டத்தின் செரெங்டாக் காவல் நிலையப் பகுதியில் உள்ள தனது குடியிருப்புக்கு அருகே 50 வயது பழங்குடியினப் பெண் புல் வெட்டச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 காவலர்கள் அவரை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

அதன்பின் அவரது பிறப்புறுப்பை சிதைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்ட அந்த பெண் லோஹர்டகா சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் உயர் சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அக்.5ஆம் தேதி நடந்துள்ளது.

இந்த நிலையில் அந்த காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லோஹர்டகா பழங்குடியின மக்கள் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.