ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள டோங்டவுன் பகுதியில் இன்று (டிச.22) அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் பின்னர் பாதுகாப்புப் படையினர், எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதுவும் நிகழவில்லை. ஆனால் இரண்டு பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள், வெடி பொருள்கள் மீட்கப்பட்டன.
இதையும் படிங்க... ஆப்கானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் தாக்குதல்