ETV Bharat / bharat

ஸ்ரீநகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2 பயங்கரவாதிகள் - Two militants killed in encounter

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

encounter in J&K's Parimpora
encounter in J&K's Parimpora
author img

By

Published : Jun 29, 2021, 12:26 PM IST

Updated : Jun 29, 2021, 12:31 PM IST

ஜம்மு காஷ்மீரில் அண்மையில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்ரீநகரின் பரிம்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரும், காவல் துறையும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இருவர் கைது

சில இடங்களில் நேற்று (ஜூன் 28) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்தபோது, பின்புறம் இருந்த நபர் தன் கைப்பையிலிருந்து எதையோ எடுக்க முயன்றார். இதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் பையைச் சோதித்தபோது, அதில் கையெறி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கு ஸ்கெட்ச்

இதையடுத்து, இருவரையும் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையில், இருவரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதி நதீம் அப்ரார் என்பதும் தெரியவந்தது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தனது ஆயுதங்களை மல்ஹூராவில் அமைந்துள்ள வீட்டில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிஆர்பிஎஃப், பாதுகாப்புப் படை இரண்டும் ஒருங்கிணைந்து, நதீம் அப்ராரின் கூட்டாளிகளைப் பிடிக்க, அவரை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு இன்று (ஜூன் 29) காலை சென்றுள்ளன.

சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள்

அப்போது அங்கிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் படுகாயமடைந்தனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அங்கு துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தானியும், நதீம் அப்ராரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதையடுத்து, அந்த வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, கையெறி குண்டுகள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

இதையும் படிங்க: அமைதியை கனவு காணும் ஜம்மு காஷ்மீர்!

Last Updated : Jun 29, 2021, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.