ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கத்கரஹா பேருந்துநிலையத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிரிழந்தனர். இவ்விபத்தின்போது பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துநரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீசாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தில் இருந்த தீயை அணைத்தனர். பேருந்துக்குள் இருந்து எரிந்த நிலையில் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட தகவலின்படி, கத்கரஹா பஸ் ஸ்டாண்டில் உள்ள மூன்லைட் பஸ்சில் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு ஓட்டுநர் மதன், மற்றும் நடத்துநர் இப்ராகிம் ஆகியோர் பேருந்துக்குள் தூங்கினர். அதன் பின்னர் எப்படியோ மெழுகுவர்த்தி விளக்கில் இருந்து ஏற்பட்ட தீயினால் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:கஞ்சா வாங்குவது தொடர்பாக தகராறு; இளைஞர் வெட்டிக்கொலை