ETV Bharat / state

தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு! - ARCHANA PATNAIK IAS

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Archana Patnaik IAS
தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள அர்ச்சனா பட்நாயக் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 4:48 PM IST

சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தார். இதற்கிடையில், சமீபத்தில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது சத்ய பிரதா சாஹூவிற்கு, தமிழக கால்நடைத் துறைச் செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அறிவித்தது.

இத்தகைய சூழலில், தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் இன்று (நவ.12) பொறுப்பேற்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கான அறையில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்ட அர்ச்சனா பட்நாயக் இன்றே அவரது பணிகளை தொடங்கினார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் 2002ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளராக பணியாற்றி வந்தார். அதற்கும் முன்பு ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை திறந்து வைத்தார் முதல்வர்..!

இதுமட்டும் அல்லாது, 2002ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், கோவையின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலமக தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார். மேலும், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் வாய்ப்பையும் அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.