ETV Bharat / bharat

ஒடிசாவில் நிர்வாணமாக நடந்து சென்ற பழங்குடியின பெண்களை மீட்ட எம்எல்ஏ..! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தகவல்! - ஒடிசா

Jharkhand women naked walk: ஒடிசாவின் சுந்தர்கர் பகுதியில் இரண்டு பழங்குடி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக நடந்து வந்த போது பாஜக எம்எல்ஏவால் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

two jharkhand woman found walking naked in odisha sundargarh area alleged sexual assault
ஒடிசாவில் நிர்வாணமாக நடந்து சென்ற பழங்குடியின பெண்களை மீட்ட எம்எல்ஏ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 10:54 PM IST

ரூர்கேலா: ஒடிசாவின் சுந்தர்கர் நகரில் உள்ள கல்லூரி சாலையில் வெள்ளிக்கிழமை (அக்.06) நிர்வாணமாக நடந்து சென்ற பழங்குடியின பெண் மற்றும் அவரது மகளை பாஜக எம்எல்ஏ மீட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பாஜக எம்எல்ஏ-விடம் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்து உள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் பெண் (45) மற்றும் அவரது மகள் (27) ஒடிசாவின் சுந்தர்கர் பகுதியில் நிர்வாணமாக நடந்து வந்த போது பாஜக எம்எல்ஏ குசும் டெட்டே (Kusum Tete) அவர்கள் நிலையைக் கண்டு, சால்வை போர்த்தி அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் அனுமதித்து உள்ளார்.

மீட்கப்பட்ட அந்த 45 வயது பெண்ணின் கணவர் இறந்த பிறகு, மைத்துனர் அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்டிலிருந்து அவர்கள் எப்படி ஒடிசா வந்தார்கள், அவர்கள் எங்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், பாஜக எம்எல்ஏ அவர்களை எப்படி மீட்டார் என்பது குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.

எம்எல்ஏ குசும் டெட்டே, பாதிக்கப்பட்ட தாய், மகளை மீட்டு சால்வையால் போர்த்தி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடமான ஆஸ்தா க்ருஹா-வில் போலீஸ் உதவியுடன் அனுமதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சுந்தர்கர் எஸ்பி பிரத்யுஷ் திவாகர் கூறுகையில், “கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்த அப்பெண் தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் அங்கு தங்கியிருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர். போலீசார் அவர்களின் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அவர்கள் குணமடைவதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு பெண் அதிகாரி தலைமையிலான குழு, காப்பகத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதாகவும்” தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக சுந்தர்கர் எஸ்பி தலைமையிலான குழு ஒன்று ஜார்கண்ட் சென்றுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இரு பெண்கள் நிர்வாணமாக நடந்து சென்றும் அவர்களை காப்பாற்ற முன்வராத நிலையில், வாகனத்தில் சென்ற பாஜக எம்எல்ஏ அவர்களை கவனித்து அவர்களை சால்வையால் மூடி, ஒரு காப்பகத்தில் அனுமதித்து உள்ளார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை.. சிக்கிய கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.