மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள டாடியோ பகுதியில் இருக்கும் 20 மாடி கட்டடத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. மும்பையின் பாட்டியா மருத்துவமனை அருகே இந்த அடுக்குமாடி கட்டடம் உள்ளது.
கட்டடத்தின் 18ஆவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது. தீவிபத்து குறித்த தகவல் வெளியானதும் சம்பவயிடத்திற்கு காவல்துறை, தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூவர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலைமை சீராக்கப்பட்ட பின் விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெறும் என மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றின் ஒழுங்கின்மையை சரிசெய்யும் நேதாஜி!