ETV Bharat / bharat

மாமா மகன்களிடம் போன் பேசிய சிறுமிகளை கொடூரமாகத் தாக்கிய குடும்பத்தார்!

மத்தியப் பிரதேசம்: தாய் வழி மாமா மகன்களிடம் செல்போனில் பேசியதற்காக குடும்பத்தினராலேயே இரண்டு சிறுமிகள் கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்ட காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girls thrashed for chatting with cousins over phone

author img

By

Published : Jul 5, 2021, 2:16 PM IST

மத்தியப் பிரதேசத்தில் மலைவாழ் சிறுமிகள் இருவர் தங்கள் மாமா மகன்களிடம் செல்போனில் பேசியதற்காக அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம், தார் மாவட்டத்தில் உள்ள பிபல்வா கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலைவாழ் சிறுமிகள் இருவரை சில இளைஞர்கள் இணைந்து கொடூரமாகத் தாக்கும் இந்தக் காணொலி கடந்த ஜூன் 25ஆம் தேதி காவல் துறையினரின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, இது குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த விசாரணையில், சிறுமிகளைத் தாக்கியவர்கள் அவர்களது சொந்த குடும்பத்தினர் என்பதும், தாய் வழி மாமா மகன்களுடன் சிறுமிகள் பேசியதைத் தொடர்ந்து, தந்தை வழி குடும்பத்தினர் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து சிறுமிகள் பயத்தில் எந்தப் புகாரும் அளிக்க முன்வராத நிலையில், தாமாக முன் வந்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுமியை கடத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்த இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.