போபால்: மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச் பசோதா பகுதியில் உள்ள கிணற்றில் சிறுமி தவறுதலாக விழுந்துவிட்டார். அவரை மீட்கும் பணிகள் நடைபெற்றபோது, கிணற்றைச் சுற்றி ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதில், எடைதாங்கமால், கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த நிகழ்வால், நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு, பலரும் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த நான்கு பேருக்கு ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், " கஞ்ச்போசோடா பகுதியில் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுகிறது. அதுகுறித்த விவரங்களை உடனுக்குடன் அங்கிருக்கும் அலுவலர்கள் வாயிலாக கேட்டுவருகிறேன். விபத்தில், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு