ETV Bharat / bharat

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் - பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் நவ.08 மற்றும் 09ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம்  அறிவித்துள்ளார்
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை
author img

By

Published : Nov 7, 2021, 8:51 PM IST

புதுச்சேரி: தொடர் மழையின் காரணமாக நாளை நவ. 8ஆம் தேதி மற்றும் நாளைய மறுதினம் நவ. 9ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியில் வரும் நவ. 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நாளை திறக்கப்பட இருந்தது.

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், அணைகள் நிரம்பி வருகின்றன.

நகரங்களில், தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. மேலும், தொடர்மழை காரணமாக, நாளை நவ.08ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு - மழையைப் பொருத்து ஆலோசனை

இதுதொடர்பாக புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், 'தொடர் மழையின் காரணமாக நாளை நவ. 08 ஆம் தேதி மற்றும் நாளை மறுதினம் நவ. 09 ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு, நடைமுறையில் இருக்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரையிலான பள்ளிகள் திறப்பு தேதி குறித்து, மழையின் தன்மையைப் பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்' என்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.