ETV Bharat / bharat

குஜராத்தில் உப்பு தொழிற்சாலை சுவர் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

குஜராத்தில் உப்பு தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Morbi
Morbi
author img

By

Published : May 19, 2022, 7:51 AM IST

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் புதன்கிழமை (மே18) சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் தொழிற்சாலையில் 15 தொழிலாளர்கள் பணி செய்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

Nine killed as wall collapses in Gujarat Morbi district
பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

மேலும் சிலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காயமுற்றோருக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமுற்றோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த தொழிலாளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.