ETV Bharat / bharat

காஷ்மீரில் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுமதி! - temple in Jammu and Kashmir

ஜம்மு: காஷ்மீரில் கோயில் கட்டுவதற்காகத் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 40 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்க துணைநிலை ஆளுநர் மனோஜ் சிம்ஹா அனுமதி வழங்கியுள்ளார்.

Manoj Sinha
மனோஜ் சிம்ஹா
author img

By

Published : Apr 1, 2021, 5:44 PM IST

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சிம்ஹா, திருப்பதி தேவஸ்தானத்துக்கு கோயில் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இடமானது 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்படுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வளாகத்தில், கோயில், வேதபதசலா, தியான மையம், அலுவலகம், குடியிருப்பு பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்படவுள்ளன. எதிர்காலத்தில், இவ்வளாகத்தில் மருத்துவ மற்றும் கல்வி வசதிகளும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில் பணி நிறைவடையும் பட்சத்தில், மாதா வைஷ்ணவி தேவி ஆலயம், அமர்நாத் கோயில் போல் சுற்றுலாப்பயணிகள், யாத்ரீகர்களை ஈர்க்கும் பகுதியாக மாறிவிடும். காஷ்மீரின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வளாகம் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: களத்தில் இறங்கிய முதல் திருநங்கை வேட்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.