தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாகர்ஜுனா சாகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) அமோக வெற்றிபெற்றுள்ளது.
இந்தத் தொகுதியின் 2018ஆம் ஆண்டு வெற்றிபெற்ற டி.ஆர்.எஸ். சட்டப்பேரவை உறுப்பினர் நொமுலா நரசிம்மய்யா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மகன் நொமுலா பகத் டி.ஆர்.எஸ். சார்பில் நிறுத்தப்பட்டார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜனா ரெட்டியைவிட சுமார் 19 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.