ETV Bharat / bharat

மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ, ஐஎன்டியூசி தலைவர் உருவப்படத்திற்கு அஞ்சலி - ஐஎன்டியூசி

புதுச்சேரி: காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ, ஐஎன்டியூசி தலைவர் உருவப்படத்திற்கு அஞ்சலி

author img

By

Published : May 20, 2021, 4:33 PM IST

புதுச்சேரி மாநில ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் உடல் நலக்குறைவால், சில நாட்கள் முன் காலமானார். நேற்றைய தினம் (மே19) அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வைசியால் வீதியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அங்கு ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜெயமூர்த்தி ஆகியோரின் உருவப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ, ஐஎன்டியூசி தலைவர் உருவப்படத்திற்கு அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஐஎன்டியூசி நிர்வாகிகள் ஞானசேகரன், சொக்கலிங்கம், ராதா ரெட்டியார், முத்துராமன், சூசைராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் மேலும் 1,957 பேருக்கு தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.