ETV Bharat / bharat

காடு, மலை கடந்து பயணம்... வாழ்வாதாரத்திற்காக அல்ல.. ஜனநாயக கடமையை நிறைவேற்ற! - தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்

தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராம மக்கள் ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தூரம் காடு, மலை, நீரோடை என கடந்து சென்று தேர்தல்களில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

Telangana
Telangana
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 7:04 AM IST

Updated : Nov 3, 2023, 10:29 AM IST

ஐதராபாத் : 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற 60 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் ஆட்சியை தக்கவைக்க் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின், பி.ஆர்.எஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பாஜக கட்சிகளும் என மும்முனை போட்டி நிலவுகிறது.

பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், அடிலாபாத், கம்மம், வாராங்கல், மகபூப்நகர் மாவட்டங்களை சுற்றி உள்ள மலைக் கிராம மக்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதிகாலையே எழுந்து கொள்ளும் இப்பகுதி மலைக் கிராம பழங்குடியின மக்கள், ஒரு கையில் குழந்தைகளையும், மற்றொரு கையில் உணவு பொட்டலங்களையும் சுமந்து கொண்டு காடு, மலை, நீரோடை என ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த பயணங்கள் அனைத்தும், அவர்களது வாழ்வாதாரத்திற்காக அல்ல, சட்டமன்ற தேர்தல் அன்று தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதற்கு. ஆமாம், சரிவர சாலை வசதி, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்னும் இந்த பழங்குடியின மக்களின் கிராமங்களை சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல், பெங்கொலு, வஜடு மண்டல் உள்ளிட்ட முலுகு மாவட்டங்களில் உள்ள மக்களும் 20 கிலோ மீட்டர் தூரம் சென்று தங்களது ஜனநாயக கடமையை சரிவர செய்து வருகின்றனர். சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தினால் இந்த பழங்குடியின மக்களை பெரிய அளவிலான அரசியல் தலைவர்கள் வந்து சந்திப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் தங்களது அன்றாட அரசியல் பணிகளுக்காக உள்ளூர் தலைவர்களையே இந்த பழங்குடியின மக்கள் நம்பியிருக்கின்றனர். போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தினால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வாக்களிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

வரும் நவம்பர் 30ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தங்களது குடியிருப்பு இருக்கும் பகுதியில் வாக்குப்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்றும், அல்லது வாக்களித்து விட்டு திரும்ப ஏதுவாக போக்குவரத்து வசதியாவது ஏற்படுத்தித் தர வேண்டும் என இந்த பழங்குடியின கிராம மக்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க : சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக நக்சல் கோட்டையில் வாக்குச்சாவடி.. சத்தீஸ்கர் மாநில தேர்தல் அதிகாரிகள் அதிரடி!

Last Updated : Nov 3, 2023, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.