ETV Bharat / bharat

நாங்கள் ஒருவேளையாவது சாப்பிட வேண்டாமா? திருநங்கைகள் கண்ணீர்!

கடந்த இரு ஆண்டுகளாக காஷ்மீரில் திருநங்கைகளின் வாழ்க்கை முடங்கிபோய் உள்ளது. தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

transgender community in Jammu and Kashmir  transgender protest  Article 370  Covid lockdown  காஷ்மீர்  திருநங்கைகள்  போராட்டம்  370 சட்டப்பிரிவு

author img

By

Published : Jun 8, 2021, 7:28 PM IST

காஷ்மீர்: காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் தொற்றுநோய் பரவல் வேறு அதிகரித்தது. இதனால் ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் திருநங்கைகள் மற்ற சமூகத்தினருடன் தொடர்பின்றி தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 370ஆவது சட்டப்பிரிவு திருத்தப்பட்டது. இதனால் அம்மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது. மேலும் மாநிலமும் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியனாக மாற்றப்பட்டது.

இது அங்குள்ள அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருநங்கை சமூகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட பணம் இல்லை. இதனால் தெருக்களில் நடனம் ஆடி பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈடிவி பாரத்துடன் பேசிய திருநங்கைகளின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சோன்சலின் தலைவர் டாக்டர் அய்ஜாஸ் அகமது பந்த் கூறுகையில், “இதுவரை எந்தவொரு அரசாங்கமும் அவர்களுக்காகவோ அல்லது அவர்களின் உரிமைகளுக்காகவோ எதையும் செய்யவில்லை. அவர்கள் இக்கட்டான நேரத்திலும் எழுப்பும் கோரிக்கைகளையும் கண்டுகொள்வதில்லை.

நாங்கள் ஒருவேளையாவது சாப்பிட வேண்டாமா? திருநங்கைகள் கண்ணீர்!

மேலும், அவர்களுக்கான திட்டங்களும் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. இதற்கிடையில், தற்போதைய தொற்றுநோய்களின் போது அத்திட்டங்கள் முற்றிலும் மறந்துவிட்டன.

திருநங்கைகள் தங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்களின் அளவை யாரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. கோவிட் பொதுமுடக்கம் அவர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கிவிட்டது” என்றார்.

அண்மையில், திருநங்கைகள் ஒன்றுகூடி ஸ்ரீநகரில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும், அப்போதுதான் தங்களால் வீடுகளில் ஒருவேளை உணவாவது உண்ண முடியும் என்று கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆயுர்வேத சிகிச்சை கோரிய ஆசாராம் பாபு மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.