கர்நாடகா: ரெட் பேர்ட் விமான போக்குவரத்துக்குச் சொந்தமான VT-R BF என்ற தனியார் பயிற்சி விமானம் சாம்ப்ரா விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டது. அதில் ஒரு விமானி மற்றும் ஒரு பயிற்சி விமானி என இருவர் பயணம் செய்துள்ளார். அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த விமானத்தை உடனடியாக தரையிரக்க முயற்சி செய்த விமானி பெலகாவியில் உள்ள வயல்வெளி ஒன்றைத் தேர்வு செய்து அங்கே தரை இறக்கியுள்ளார். பயங்கர சத்தத்துடனும், தடுமாற்றத்துடனும் தரையிரங்கிய அந்த விமானத்தில் பயணித்த விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
-
#WATCH | Karnataka | A two-seater training aircraft, reportedly belonging to Redbird Aviation, made an emergency landing near Sambra airport in Belagavi after technical glitches encountered during the flight. Both pilots sustained minor injuries. https://t.co/usm5lQlujH pic.twitter.com/kxWWQwo3wt
— ANI (@ANI) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Karnataka | A two-seater training aircraft, reportedly belonging to Redbird Aviation, made an emergency landing near Sambra airport in Belagavi after technical glitches encountered during the flight. Both pilots sustained minor injuries. https://t.co/usm5lQlujH pic.twitter.com/kxWWQwo3wt
— ANI (@ANI) May 30, 2023#WATCH | Karnataka | A two-seater training aircraft, reportedly belonging to Redbird Aviation, made an emergency landing near Sambra airport in Belagavi after technical glitches encountered during the flight. Both pilots sustained minor injuries. https://t.co/usm5lQlujH pic.twitter.com/kxWWQwo3wt
— ANI (@ANI) May 30, 2023
இதனை தொடர்ந்து உடனியாக அவர்களை அங்கிருந்த மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்பக்குழு விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்களை அங்கிருந்த அப்புறப்படுத்திய காவல்துறையினர் விமானத்தை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விமானம் தரையிரக்கப்படும் நேரம் பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் சேதம் தவிற்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் பலரும் அதை தங்கள் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:காஷ்மீர் யாசின் மாலிக்கிற்கு தூக்கு? என்.ஐ.ஏ. மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!