டெல்லி: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்றிரவு சென்று கொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் தடம் புரண்டது. இதில் அந்த ரயிலின் சில பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ஷாலிமர் (மேற்குவங்கம்) - சென்னை விரைவு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு, அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
-
#WATCH | Prime Minister Narendra Modi chairs a high-level meeting to review the situation in relation to the #BalasoreTrainAccident pic.twitter.com/QKIhB0tfU4
— ANI (@ANI) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Prime Minister Narendra Modi chairs a high-level meeting to review the situation in relation to the #BalasoreTrainAccident pic.twitter.com/QKIhB0tfU4
— ANI (@ANI) June 3, 2023#WATCH | Prime Minister Narendra Modi chairs a high-level meeting to review the situation in relation to the #BalasoreTrainAccident pic.twitter.com/QKIhB0tfU4
— ANI (@ANI) June 3, 2023
மேலும், படுகாயம் அடைந்த 650க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கோபல்பூர், பாலசோர், பத்ராக், சோரோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சங்கிலித் தொடர் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக டெல்லியில் ரயில்வே அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 3) ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டார். விபத்து நடந்த இடத்தில் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
PM @narendramodi is leaving for Odisha where he will review the situation in the wake of the train mishap.
— PMO India (@PMOIndia) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM @narendramodi is leaving for Odisha where he will review the situation in the wake of the train mishap.
— PMO India (@PMOIndia) June 3, 2023PM @narendramodi is leaving for Odisha where he will review the situation in the wake of the train mishap.
— PMO India (@PMOIndia) June 3, 2023
படுகாயம் அடைந்துள்ள பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்துள்ளார். இதனிடையே விபத்து நடந்த ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளதாகவும், கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் பிரதமர் அலுவலக ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி நிறைவடைந்துள்ளது என்றும், மற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
-
#WATCH | West Bengal CM Mamata Banerjee reaches Odisha's #Balasore where a collision between three trains left 261 dead pic.twitter.com/2q4KSNksum
— ANI (@ANI) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | West Bengal CM Mamata Banerjee reaches Odisha's #Balasore where a collision between three trains left 261 dead pic.twitter.com/2q4KSNksum
— ANI (@ANI) June 3, 2023#WATCH | West Bengal CM Mamata Banerjee reaches Odisha's #Balasore where a collision between three trains left 261 dead pic.twitter.com/2q4KSNksum
— ANI (@ANI) June 3, 2023
இதனிடையே விபத்து நடந்த இடத்தில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோரமண்டல் விரைவு ரயில் நாட்டில் இயக்கப்படும் மிகச்சிறந்த ரயில்களில் ஒன்று. நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்துள்ளேன். 21ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற ஒரு ரயில் விபத்தை பார்த்ததில்லை.
எனக்கு தெரிந்தவரை ரயில் மோதலை தடுக்கும் கருவி இல்லை. அது இருந்திருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்காது. இறந்தவர்கள் இனி திரும்பி வரப்போவது இல்லை. தற்போது, இயல்பு நிலையை மீட்டெடுப்பது எங்கள் பணி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
விபத்தில் இறந்த எங்கள் மாநில மக்களின் குடும்பத்துக்கு, ரூ.5 லட்சம் வழங்குகிறோம். மீட்புப் பணிகளில் ஒடிசா மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எங்கள் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கும்" என்றார்.