சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்புகளுக்குப் பின்னர் நாளை (அக்.19) உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.
கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி போன்ற படங்களுக்குப் பிறகு தற்போது த்ரிஷா விஜய் கூட்டனி மீண்டும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். இது மேலும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சமீபத்தில் இப்படத்தின் டெர்யலர் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து லியோ டிரைலரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இந்நிலையில், சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் 400க்கும் மேற்பட்ட இருக்கைகளை சேதப்படுத்தினர்.
-
BREAKING: Tamil Nadu government REFUSES to accept Madras High Court's reconsideration on #Leo 7 am shows.
— Manobala Vijayabalan (@ManobalaV) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hence it is CLEAR now that there is no 4 am or 7 am shows for #LokeshKanagaraj's #LeoFilm.
As stated in earlier GO, Joseph Vijay's #LEOFDFS will start… pic.twitter.com/atGHvbTt7v
">BREAKING: Tamil Nadu government REFUSES to accept Madras High Court's reconsideration on #Leo 7 am shows.
— Manobala Vijayabalan (@ManobalaV) October 18, 2023
Hence it is CLEAR now that there is no 4 am or 7 am shows for #LokeshKanagaraj's #LeoFilm.
As stated in earlier GO, Joseph Vijay's #LEOFDFS will start… pic.twitter.com/atGHvbTt7vBREAKING: Tamil Nadu government REFUSES to accept Madras High Court's reconsideration on #Leo 7 am shows.
— Manobala Vijayabalan (@ManobalaV) October 18, 2023
Hence it is CLEAR now that there is no 4 am or 7 am shows for #LokeshKanagaraj's #LeoFilm.
As stated in earlier GO, Joseph Vijay's #LEOFDFS will start… pic.twitter.com/atGHvbTt7v
இது குறித்து மனோபாலா விஜயபாலன் சேதமைடந்த இருக்கைகளின் புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், ரசிகர்களின் இந்த செயலை கண்டிக்கும் வகையிலும், தனியார் திரையரங்குகளின் பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இனி எந்த படத்தின் டிரைலர்களும் திரையரங்குகளில் வெளியிடப்படாது என முடிவு செய்துள்ளதாக அறிவித்ததார். இதனையடுத்து, லியோ படத்தின் முதல் காட்சியை ரத்து செய்வதாகவும் முதல் காட்சி காலை 9 மணியளவில் இருந்துதான் ஆரம்பிக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையாக, படத்தின் தயாரிப்பாளர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் காட்சி குறித்து நேரத்தை மறுபரிசீலிக்க வேண்டும் என்றும் காலை 4 மணி காட்சியை 7 மணி காட்சியாக மாற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. படத்தின் முதல் காட்சி நேரத்தை ரத்து செய்தும், காலை 9மணி அளவில் தான் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: லியோ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை!