ETV Bharat / bharat

மனதை உலுக்கும் உருக்கமான நிகழ்வு - இறந்த தாயைக் கட்டியணைத்து உறங்கிய 5 வயது குழந்தை! - மனதை உலுக்கும் உருக்கமான நிகழ்வு

பிகாரில் , தாய் இறத்தது கூட தெரியாமல் கட்டியணைத்து தூங்கிய 5 வயது ஆண் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Child wrapped in dead mother body in Bhagalpur

author img

By

Published : Aug 2, 2022, 10:58 PM IST

பிகார்: பாகல்பூர் ரயில் நிலையத்தில் தான் அந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) இரவு 9:30 மணியளவில் பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் இறந்துகிடப்பதாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

நேரில் சென்று பார்த்த போது 5 வயது ஆண் குழந்தை ஒன்று அவரை கட்டியணைத்து தூங்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து அந்தப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு அந்த 5 வயது குழந்தை உதவி மையத்திற்கு அனுப்பப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவருகிறது.

குழந்தை தற்போது பேச முடியாத நிலையில் இருப்பதால், ரயில் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருந்தார்கள், எங்கிருந்து வந்தார்கள் மற்ற விவரங்கள் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவப்பரிசோதனையில் குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 'நீங்க வரியை உயர்த்திட்டு, மத்திய அரசு மீது பழிபோடுறீங்க': நிர்மலா சீதாராமன் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.