ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகர் பகுதியில் சாலையோரம் மாரடைப்பால் மயங்கி விழுந்த நபரை அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜேந்திரநகர் பகுதியில் இன்று (பிப். 24) போக்குவரத்து காவலர் ராஜசேகர் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுவதை கவனித்தார்.
-
Commendable efforts of Shri Rajasheker, a constable from the Rajendranagar PS,who demonstrated exceptional professionalism and presence of mind in saving a precious life,Upon recognising the critical situation,he promptly administered CPR to the person, leading to their recovery. pic.twitter.com/SCdkZpp0uw
— Cyberabad Police (@cyberabadpolice) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Commendable efforts of Shri Rajasheker, a constable from the Rajendranagar PS,who demonstrated exceptional professionalism and presence of mind in saving a precious life,Upon recognising the critical situation,he promptly administered CPR to the person, leading to their recovery. pic.twitter.com/SCdkZpp0uw
— Cyberabad Police (@cyberabadpolice) February 24, 2023Commendable efforts of Shri Rajasheker, a constable from the Rajendranagar PS,who demonstrated exceptional professionalism and presence of mind in saving a precious life,Upon recognising the critical situation,he promptly administered CPR to the person, leading to their recovery. pic.twitter.com/SCdkZpp0uw
— Cyberabad Police (@cyberabadpolice) February 24, 2023
இதையடுத்து உடனடியாக அருகே சென்று அவரை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால், அவர் சுயநினைவை இழந்துள்ளதும், மூச்சு விட சிரமப்படுவதும் இவருக்கு தெரியவந்தது. இதனால் உடனடியாக அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்க தொடங்கினார். பல நிமிடங்கள் போராடிய நிலையில், மயங்கிய நபரின் உடலில் அசைவுகள் தெரிந்தன. மூச்சுவிடத் தொடங்கினார்.
இதையடுத்து ராஜசேகர் அவரை அருகில் உள்ள மருத்துமனையில் கொண்டு சேர்த்தார். இப்போது அந்த நபர் நலமுடன் உள்ளார். முதல்கட்ட பரிசோதனையில் அவருக்கு மாராடைப்பு ஏற்பட்டு தெரியவந்துள்ளது. இதனிடையே இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் போக்குவரத்து காவலர் ராஜசேகருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த தெலங்கானா மாநில சுகாரதாத்துறை அமைச்சர் டி ஹரிஷ் ராவ் ராஜசேகரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: UPI பல்வேறு நாடுகளுக்கு டெம்ப்ளேட்டாக இருக்கலாம் - பிரதமர் மோடி