ETV Bharat / bharat

புதுச்சேரியில் நடந்த ஒரு நாள் கடை அடைப்புப் போராட்டம்.. ஏன்?

author img

By

Published : Jun 29, 2023, 11:07 PM IST

புதுச்சேரியில் பெரிய மார்க்கெட் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் ஒரு நாள் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர். மேலும், அரசு இந்த முடிவை திரும்பப்பெறவில்லை என்றால் அடுத்தகட்டமாக பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.

closed shop for a day
ஒரு நாள் கடை அடைப்பு
புதுச்சேரியில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம்

புதுச்சேரி: பெரிய மார்க்கெட் குபேர் அங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் முழுமையாக அகற்றி புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இங்கு மளிகைப் பொருள்கள், காய்கறி வகைகள், பழ வகைகள், மீன், கறி, பூக்கடைகள், இரும்புப் பொருட்கள் விற்கும் கடைகள், அடிக்காசு கடைகள் என 1400-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடைகளில் ஒட்டுமொத்தமாக நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அரசு திடீரென ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டை முழுமையாக இடித்துவிட்டு புதிய மார்க்கெட் கட்டுவதற்கு 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், 8 மாதங்களில் கட்டுமானப் பணியை முடித்து வியாபாரிகளிடம் கடைகளை ஒப்படைப்பதாகவும் கூறி வியாபாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மார்க்கெட்டை காலி செய்து கொண்டு அரசு சொல்லும் இடத்தில் தற்காலிக கடை அமைத்துக் கொள்ளும்படி, வலியுறுத்தி வருகிறார்கள்.

அரசின் இந்த முடிவினை ஒட்டுமொத்த வியாபாரிகள் அனைவரும் ஏற்கவில்லை. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அரசின் இத்தகைய முடிவினை கைவிட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பழைய மார்க்கெட்டை புதுப்பித்துக் கொடுக்க அரசை வலியுறுத்தி பெரியமார்க்கெட் குபேர் அங்காடி வியாபாரிகள் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தியது மட்டுமல்லாமல் கட்சித் தலைவர்களை சந்தித்து முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடைகளை மூடியுள்ள வியாபாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனியார் மண்டபத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில் 4000 வியாபாரிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளார் சேது செல்வம்: ‘கடந்த காலங்களில் முத்தியால்பேட்டை மார்க்கெட்டை கட்டுவதற்கு வியாபாரிகளை காலி செய்து வெளியேற்றிவிட்டு மார்க்கெட்டை கட்டி வியாபாரிகளிடம் திருப்பிக் கடைகளை ஒப்படைப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் காலதாமதம் ஏற்பட்டது. அதுபோல் நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டுவதற்கு கடைகளை காலி செய்து மார்க்கெட் இடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் இங்குள்ள வியாபாரிகள் படும் சிரமத்தைப் பார்த்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் அரசு சொல்வதை நம்பி பெரிய மார்க்கெட்டை காலி செய்து விட்டால் வியாபாரிகளும் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும் என அஞ்சுகிறார்கள். எனவே அரசு வியாபாரிகளின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்தும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அரசு செயல்படுத்த வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.

பெரிய மார்க்கெட்டை ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு கட்டுவதை கைவிட்டு தேவையற்ற சில பகுதிகளை இடித்து விட்டு கடைகளை கட்டி இங்குள்ள வியாபாரிகளை இந்த கடைகளுக்கு மாற்றி கொடுக்க வேண்டும்,
பழைய கடைகளை இடிக்காமல் பராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பெரிய மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்,அரசு பெரிய மார்க்கெட்டை மாற்ற முயற்சித்தால் மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்தப்படும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:காங்கிரஸ் கட்சிக்கு போன் பே கடும் எச்சரிக்கை.. எதுக்கு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.