உலகையே உலுக்கிவரும் கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவில் கட்டுக்குள் வந்த நிலையில், பிரிட்டன் நாட்டிலிருந்து பரவிவரும் உருமாறிய கரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த உருமாறிய வைரஸ் தீவிரத்தன்மை அதிகம் கொண்டதாகவும், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக பிரிட்டன் நாட்டிற்கான விமான சேவைகள் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ரத்து செய்யபட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் உருமாறிய கரோனா வைரஸ் பரவல் கண்டறியும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்படுகிறது. நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து வந்துள்ள 33 ஆயிரம் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடம் தொடர்பிலிருந்தவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, உருமாறிய கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் கரோனா; 18 கோடியைத் தாண்டிய பரிசோதனை எண்ணிக்கை