ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS @ 9 AM
TOP 10 NEWS @ 9 AM
author img

By

Published : Oct 15, 2021, 9:14 AM IST

  1. போக்குக் காட்டிய டி23 புலி பிடிபடுவது உறுதி

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதிகளில் நான்கு பேரை அடித்துக் கொன்ற டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் 20 நாள்களாகப் போக்குக் காட்டிவந்த டி23 புலி பிடிபடுவது உறுதியாகியுள்ளது.

2. சிறையிலிருக்கும் ஆர்யன் கானுக்கு ரூ.4,500 மணி ஆர்டர் அனுப்பிய குடும்பம்

மும்பை சிறையிலிருக்கும் ஆர்யன் கானின் செலவுக்காக ரூ.4,500 மணி ஆர்டர் தொகையை அவரது குடும்பத்தினர் அனுப்பியுள்ளனர்.

3. 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் ராமர் கோயில் திறக்கப்படும்

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு கோயில் திறக்கப்படும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

4. கிளிக் லிங்க், கெட் லிமிட்லெஸ் மணி - உஷார் மக்களே!

லாட்டரி, பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாக செல்பொன் எண்ணுக்கு லிங்குடன் வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறுவதைத் தடுப்பது குறித்தும், அவற்றின் வகைகள் குறித்தும் கீழே காண்போம்.

5. மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவுக்குப் புதிய ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலராக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் காவல் துறை கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல் செயல்படுவார் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுகவின் அறிக்கைக்கு அமைச்சர் கண்டனம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையைக் கண்டித்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

7. தொழிலதிபர் கடத்தல் விவகாரம்: காவல் உயர் அலுவலருக்கு உதவியவர் விடுவிப்பு

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் விவகாரத்தில் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு உதவி செய்ததாக தனபால் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்து பிணையில் விடுவித்தனர்.

8. கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்

அண்டை நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9. ரவுடி நாகூர் மீரானை வெட்டிக்கொன்ற கும்பல் காவல் நிலையத்தில் சரண்

ஆதம்பாக்கத்தில் பிரபல ரவுடியும், காங்கிரஸ் கட்சிப் பிரமுகருமான நாகூர் மீரானை ஐந்து பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்த நிலையில், காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளது.

10. ரசிகர்களின் மனதை சாஞ்சாட வைக்கும் நடிகை சஞ்சீதா

ரசிகர்களின் மனதை சாஞ்சாட வைக்கும் நடிகை சஞ்சீதா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.