ETV Bharat / bharat

9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 9 AM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம் இதோ...

top 10 news at 9 am
9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 9 AM
author img

By

Published : Mar 14, 2021, 8:43 AM IST

'அதிமுகவின் தேர்தல் அறிவிப்பு சிவகாசி சரவெடி போல் அதிரும்’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அதிமுகவின் தேர்தல் அறிவிப்பு சிவகாசி சரவெடி போல் அதிரும் என அதிமுக கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

’சிறப்பான ஆட்சி தொடர மக்கள் ஆதரிக்க வேண்டும்’: பாமக தலைவா் ஜி. மணி பிரச்சாரம்

எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான ஆட்சி தொடர மக்கள் தங்களுக்கு ஆதரவு தர வேண்டுமெனக் கோரி, வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு ஆதரவாக பாமக தலைவர் ஜி.மணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

’மீம்ஸ்கள் குறித்து கவலை இல்லை' - அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி

மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தில் காரியாலயத்தைத் திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜு, "சமூக வலைகதளங்களில் என்னைக் குறித்து வெளியாகும் மீம்ஸ்கள் குறித்து கவலை இல்லை" என செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

’ஒற்றுமை இல்லாததே தோல்விக்கு காரணம்’ - அமைச்சர் சி. வி. சண்முகம்

திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், "ஒற்றுமை இல்லாததே சென்ற முறை தோல்வியுற்றதற்குக் காரணம் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் தீடீர் தீ!

தாம்பரம் அருகே டயர் உதிரிபாகங்கள் ஏற்றி வந்த லாரியின் முன் பாகம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திம்பம் பகுதியில் மீண்டும் விபத்து: போக்குவரத்து சிக்கலால் பயணிகள் கடும் அவதி

சத்தியமங்கலம், திம்பம் மலைப்பாதையில் கிரானைட் லாரி கவிழ்ந்ததால், பயணிப்பதற்கு பேருந்து கிடைக்காமல் பத்து மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர்.

காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டு நண்பர் கொலை?...கைதான இளைஞர்!

கடனை அடைப்பதற்காக உதவி கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கால்வாயில் நண்பனைத் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசி என்ற பெயரில் மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் கொள்ளை!

கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவதாகக் கூறி, மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையைக் கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

புகையிலை வியாபாரியிடம் 2.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

சத்தியமங்கலம் அருகே சரக்கு வாகனத்தில் சென்ற புகையிலை வியாபாரியிடம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் புதைத்து வைத்து கஞ்சா விற்று வந்த பெண் கைது

தாம்பரம் பகுதியில் மாதக்கணக்கில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.