ETV Bharat / bharat

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm
author img

By

Published : Mar 19, 2021, 2:58 PM IST

’மக்கள் விரும்பும் இரண்டு விஷயம் திமுகவிடம் இல்லை’ - அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் விரும்பும் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதி ஆகியவை திமுகவிடம் இல்லாததால், இன்னும் 100 ஆண்டுகளுக்கு அதிமுகவே ஆட்சியமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

’டெல்டா மாவட்டங்களைப் பாதுகாத்து தந்திருக்கிறோம்’ - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து, அவற்றைப் பாதுகாத்து தந்திருக்கிறோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார்.

’அதிமுகவின் புகாருக்கு அஞ்சப்போவதில்லை’ - செந்தில் பாலாஜி

”அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் என் மீது அளித்த புகார் குறித்து நான் அஞ்சப்போவதில்லை” என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் தேர்தல் பொது பார்வையாளர், மாவட்டத் தேர்தல் அலுவலர் திடீர் ஆய்வு!

தேர்தல் பொது பார்வையாளர், மாவட்டத் தேர்தல் அலுவலர் திடீர் ஆய்வுசெய்தனர்.

ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டத்துக்கு எதிரான தீபா மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் தொடங்கப்பட்ட 'ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' சட்டத்தை எதிர்த்து தீபா தாக்கல்செய்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை

வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ள கேமரா பொருத்தும் பணிகளுக்காகப் பள்ளிகள் திறந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சிலிண்டர், குடிநீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய மாவட்டத் தேர்தல் அலுவலர்

நூறு விழுக்காடு வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்கதிர்பூர் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல் துறையினரின் வாக்கி டாக்கி மாயம்!

நுங்கம்பாக்கம் அருகே காவலர் வாகனத்தில் வைத்திருந்த வாக்கி டாக்கியைத் திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

’ஜமைக்காவுக்கு கோவிட் தடுப்பூசி கொடுத்ததற்கு நன்றி’ - கிறிஸ் கெயில்

ஜமைக்கா நாட்டுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!

பழனியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது கடும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.