ETV Bharat / bharat

காலை 11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 am

author img

By

Published : Jul 31, 2021, 10:58 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச்சுருக்கம்..

காலை 11 மணி செய்திச்சுருக்கம்
காலை 11 மணி செய்திச்சுருக்கம்

1. டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வட்டு எறிதலில் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஒன்பதாவது நாளான இன்று (ஜுலை.31), மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

2. பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல்

காஷ்மீர் : புல்வாமாவின் நாக்பெரான் - தார்சார் வனப்பகுதியில் காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

3. 6 Years of Orange Mittai... ஆரஞ்சு மிட்டாய் கதை அப்பாவை ஞாபகப்படுத்தியது - விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தந்தை கதாபாத்திரத்தில் நடித்த ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.

4. சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்து 90 மில்லியன் லிட்டர் குடிநீர்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் முதல் கட்டமாக 90 மில்லியன் லிட்டர் குடிநீர் இந்த வாரத்தில் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

5. கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்திய கருத்தரங்கம் - தமிழ்நாடு மீனவர்களை கௌரவித்த டிஜிபி

தமிழ்நாடு மீனவர்கள் தான் கடலோர பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

6. ‘பாடநூல் கழகத்தில் தீ விபத்து பாதுகாப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்’ - லியோனி

தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படவேண்டும் என பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

7. டோக்கியோ ஒலிம்பிக் - இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ் தோல்வி

ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் வில்வித்தையில் பங்கேற்ற அதானு தாஸ், இன்று நடந்த போட்டியில் தோல்வியடைந்தார்.

8.கணவர் மீது முதல் மனைவி புகார் - மூன்று திருமணங்கள் செய்தவர் கைது

கரூரில் மூன்று திருமணங்கள் செய்த கணவர் மீது முதல் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை காவல் நிலையத்தில் கைது செய்தனர்.

9.சிவசங்கர் பாபா வழக்கு - லேப்டாப்பில் உள்ள தரவுகளை வைத்து விசாரணை நடத்த திட்டம்

சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினியில் உள்ள தரவுகளின் அடிப்படையில் ஆசிரியைகளிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10.மலக்குழி மரணங்களே நிகழவில்லை: சமூகநீதி அமைச்சர் சர்ச்சை தகவல்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, மலக்குழி மரணங்கள் ஒன்று கூட நிகழவில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்தது சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.