ETV Bharat / bharat

TOP 10 HIGHLIGHTS: 100 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ் மைல்கல் - இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி இலக்கு

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் 100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை இன்று எட்டியுள்ளது. இந்த சாதனை குறித்த பத்து முக்கிய அம்சங்கள் இதோ.

Covid vaccine milestone
Covid vaccine milestone
author img

By

Published : Oct 21, 2021, 6:01 PM IST

  1. இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் நடப்பாண்டு(2021) ஜனவரி 16ஆம் தேதி முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு தொடங்கப்பட்டது
  2. பிப்ரவரி 2ஆம் தேதி முன்களப் பணியாளர்களுக்கும், மார்ச் 1ஆம் தேதி 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோயாளிகளுக்கும், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் என திட்டம் விரிவாக்கப்பட்டது
  3. 2021 ஜனவரி 2ஆம் தேதி, முதலில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் அரசின் ஒப்புதல் கிடைத்தது
  4. 2021 ஜூன் மாதத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது இந்த மூன்று தடுப்பூசிகளும்தான் செலுத்தப்பட்டுவருகின்றன
  5. தடுப்பூசித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கோவின் (COWIN) என்ற பிரத்யேக இணையதளத்தை அரசு வடிவமைத்தது. தேசிய சுகாதார ஆணையத்தின் சிஇஓ ஆர்.எஸ். சர்மா இந்த கோவின் தளத்தை வடிமைத்தார். இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்கு இந்த ஒருங்கிணைந்த இணையதளம் முக்கியப் பங்காற்றுகிறது
  6. மாநிலங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் 12 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி முதலிடத்தில் உள்ளது. லட்சத்தீவில் 99 ஆயிரத்து 963 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன
  7. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், கோவா, ஜம்மு - காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, தாத்ரா நகர் - ஹவேலி ஆகிய எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல்டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
  8. 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற இலக்கை மிக வேகமாக எட்டிய நாடாக இந்தியா சாதனை புரிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று, ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவும் ஒரு உலக சாதனையாகும்
  9. இந்தியாவில் காசநோய்(TB) தடுப்பூசி 100 கோடி இலக்கை எட்ட 32 வருடங்களும், போலியோ தடுப்பு மருந்து 100 கோடி இலக்கை எட்ட 20 வருடங்களும் பிடித்தன. ஆனால், கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்ட ஒன்பதே மாதங்களில் 100 கோடி இலக்கை எட்டியுள்ளது. சராசரியாக இந்தியாவில் நாளொன்றுக்கு 35 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
  10. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 118 வயது மூதாட்டியான துளசாபாய் என்பவர் நடப்பாண்டு (2021) ஏப்ரல் 4ஆம் தேதி கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாட்டின் மிக வயதான நபர் இவரே

இதையும் படிங்க: டிப்ஸ்.. பச்சிளம் குழந்தை, தாய்மார்களின் தோல் பராமரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.