மாநிலங்களவை நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கர்நாடக உறுப்பினர் சந்திரசேகர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.
அரசு ட்விட்டர் கணக்குகளை முடக்குவதன் மூலம் கருத்து சுதந்திரத்தை முடக்குகிறதா என்று உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், நாடு முழுவதும் 140 கோடி சமூக வலைதள பயனாளிகள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், லிங்க்டு இன் ஆகிய தளங்களைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிறுவனங்கள் நாட்டில் வணிகம் செய்வதற்கு முழு சுதந்திரம் உள்ளது.
அதேவேளை அதைத் தவறான முறையில் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது. இன்டெர்னெட் என்பது ஒரு சில நிறுவனங்களின் பிடிக்குள் மட்டும் சிக்கிவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.