உத்தரகாசி (உத்தரகாண்ட்): தக்காளி இப்போது வடக்கே உள்ள மாநிலங்களில் நினைத்துக்கூட பார்க்காத விலையில் விற்பனை ஆகிறது. சமையலறையின் பிரதான உணவான தக்காளி, கங்கோத்ரி தாம் பகுதியில் கிலோ ஒன்றுக்கு ரூ. 250 ஆகவும், உத்தரகாசி மாவட்டத்தில் ஒரு கிலோ ரூ. 180 முதல் ரூ. 200 ஆகவும் விற்பனை ஆகிறது.
காய்கறி விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது, உத்தரகாசி பகுதியில் திடீரென தக்காளி விலை உயர்ந்துள்ளது."உத்தரகாசியில் தக்காளி விலை உயர்ந்து வருவதால் நுகர்வோர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். மக்கள் அவற்றை வாங்க கூட தயாராக இல்லை. கங்கோத்ரி, யமுனோத்ரியில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 200 முதல் ரூ. 250 வரை விலை விற்பனை ஆகிறது" என்று காய்கறி விற்பனையாளர் ராகேஷ் ANI- செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
அதிக அளவில் தக்காளி பயிரிடும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கனமழை காரணமாக விநியோகச் சங்கிலியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே, காய்கறிகளின் விலை கடுமையாக உயர வழிவகுத்துள்ளது என்று பலர் கூறுகின்றனர்.
தக்காளி ஒப்பீட்டளவில் குறைந்த நாள் ஆயுளைக் கொண்டுள்ளது. இது அவற்றின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. சென்னையில் தற்போது தக்காளி கிலோ ரூ. 100 முதல் ரூ. 130 வரை விற்பனை ஆகிறது. விலை உயர்வை எதிர்கொண்டுள்ள தமிழக அரசு, தற்போது தக்காளியின் அதிக விலை உயர்வைக் கண்டுள்ள சுழல்நிலைக்கு மத்தியில், நுகர்வோர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில், மானிய விலையில் கிலோ ரூ. 60-க்கு தக்காளி விற்பனையைத் தொடங்கியுள்ளது.
பிற மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் சமீப நாட்களாக தக்காளியின் விலை உயர்வை அடைந்துள்ளது. பெங்களூருவில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.101 முதல் ரூ. 121 வரை விற்பனை ஆகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட திடீர் வெப்பநிலை அதிகரிப்பு, தக்காளி விளைச்சலில் பூச்சித் தாக்குதல் மற்றும் சந்தை விலை உயர்வு ஆகியவற்றால் தான் தற்போது தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பாரத் 6ஜி தொழில்நுட்பம் அறிமுகம்... 2030க்குள் அதிவேக இணைய சேவை வழங்க திட்டம்!