ETV Bharat / bharat

நீங்கள் நம்பும் ஒரு நபரிடம் இருந்து இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்! - ஜோதிடம்

October 27 Rasipalan: ஐப்பசி 10, அக்டோபர் 27 வெள்ளிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு பலன்களைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 6:25 AM IST

மேஷம்: இன்று நாள் முழுக்க நீங்கள் செய்ய வேண்டிய வேலைப் பட்டியல் நீண்டிருக்கும். திட்டமிடல், கூட்டங்கள் என பல்வேறு முக்கிய வேலைகள் குவிந்திருக்கும். மற்றவர்களிடமிருந்து போதிய உள்ளீடுகள் கிடைக்காததால் சோர்வும், மன உளைச்சலும் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும்போது, அவை தெளிவாகும்.

ரிஷபம்: உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் இயக்கப்படாமல், அதற்கு பதிலாக நிதர்சனமான, புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெருந்தன்மையுடனும், திறந்த மனதுடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்கும்.

மிதுனம்: வேலைக்கும், குடும்பத்திற்கும் இடையில் உங்கள் நேரத்தைப் பிரித்து சரியாக கையாள்வீர்கள். உழைப்பில் கவனத்தைத் திருப்பினாலும், குடும்பத்திற்காகவும் நேரத்தைச் செலவிடுவீர்கள். அதுமட்டுமல்ல, குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டு, அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். உங்களுடைய கனவுகள் நனவாகும் நாள் இது.

கடகம்: உங்கள் நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பொறுப்பும், கட்டுப்பாடும் பாராட்டப்படுவதுடன், உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையையும் மேம்படும்.

சிம்மம்: சுற்றி இருப்பவர்களை வைத்து ஒருவரை எடை போடலாம் என்ற கருத்து நிலவுவது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில், உங்கள் இயல்பான உணர்வுகளின் அடிப்படையில், பலரை நண்பர்களாக்கியிருப்பீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், கண்மூடித்தனமாக நம்பும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களின் சிறப்பான நெட்வொர்க் ஒன்றை நீங்கள் நிறுவியிருக்கலாம்.

கன்னி: உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு, உங்களுக்கான நாளை உருவாக்கும். சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள், உங்களுக்குள் இருப்பதை வெளிக் கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை கொஞ்சம் சேகரித்து வையுங்கள்.

துலாம்: உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறிய விஷயங்களையும், சிக்கல்களையும் பற்றி கவலைப்படுவீர்கள். இன்று பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனதை சமநிலையில் வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்: உங்கள் கற்பனை இன்று அதீத வேகமெடுத்து பறக்கும். நீங்கள் உடல் ரீதியாக பயணம் மேற்கொள்ளாவிட்டாலும், உங்கள் மனம் அதிவேகத்தில் எல்லைகளைக் கடந்து பயணிக்கும். உங்கள் விருப்பப்படி செயல்பட்டாலும், சிந்தித்து செயலாற்றுங்கள். எவ்வாறாயினும், பெரிய நடவடிக்கைகள் எடுக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

தனுசு: மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளின் தாக்கத்தை தற்போது அனுபவித்து வருகிறீர்கள். ஆனால், இனிமேலும் அது நீடிக்க முடியாது. ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உடல்நலத்தை பராமரிப்பது அவசியம். ஊக்கத்துடன் வேலை செய்ய தூண்டும் நற்செய்தியோடு உங்கள் பயணம் தொடங்கும். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் விட்டுச் செல்லும்.

மகரம்: உணர்ச்சிகளைக் கடந்து, நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கான பாதையை தீர்மானிக்கும். உங்கள் உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளால் எதிர்கால வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். ஏனென்றால், உணர்வுப்பூர்வமாக எடுக்கும் முடிவால் ஏற்படும் சேதமானது, சரி செய்ய முடியாத அளவு அதிகமாக இருக்கும். இன்று, உங்கள் இயல்பான பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும்.

கும்பம்: முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்கும்போது, உங்கள் உணர்ச்சிகளை முன்னிறுத்தி அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். பகுத்தறிவு தேவைப்படும் விஷயத்தில், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் போக்கு உங்கள் பாதையில் ஒரு தடையாக மாறும். இந்த பழக்கத்தை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில், அதற்காக அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

மீனம்: அலுவலகத்தில் நிறைய வேலைகளுடன் மும்முரமாக இருப்பீர்கள். காதல் விஷயத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படும். ஆனால், மாலை நேரத்தில் என்ன நடந்தாலும், அதை முழு மனதுடன் நீங்கள் வரவேற்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.