சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 63ஆவது நாளாக இன்றும் (ஜூலை 23) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 96.72 ரூபாய்க்கும், டீசல் 89.62 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் 111.35 ரூபாய்க்கும், டீசல் 97.28 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் 106.03 ரூபாய்க்கும், டீசல் 92.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு ஏன் போராடவில்லை - செந்தில் பாலாஜி