ஐதராபாத் : உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இன்னும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்று கூறலாம்.
ஆட்டிச பாதிப்பு மற்றும் பல்வேறு நரம்பியல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக குழந்தையின் சமூக செயல்பாடுகள் அவர்களின் வயதுக்கு ஏற்ப மாற்றம் காணாது. எனவே, இந்த ஆட்டிச பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் நிலை குறித்து புரிய வைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு, "மாற்றம்: அனைவருக்குமான நரம்பியல் உள்ளடக்கிய உலகத்தை நோக்கி" என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக ஆட்டிச தினம் கடைபிடிக்கப்படுகிறது. நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு என்பது குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகளில் ஒரு நிலை.
இதுவே ஆட்டிசம், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு என அழைக்கப்படுகிறது. பொதுவாக, இந்த நோய் மூன்று வயதிற்கு முன்பே குழந்தைகளிடம் காணப்படுகிறது. ஆனால் ஆட்டிசத்தால் ஏற்படும் பிரச்சனைகள் நோயாளியின் வாழ்நாள் முழுவதும் பாதிப்புகளை உருவாக்குகின்றன. இந்த ஆட்டிச பாதிப்பு இருபாலரிடமும் உருவாகலாம். அதேநேரம் பிறக்கும் போதே இந்த பாதிப்பை கண்டறிய முடியாது என்பது துரதிர்ஷ்டவசமானது.
ஆனால் அதன் வெளிப்பாடுகள் படிப்படியாக பெற்றோரால் கவனிக்கப்படுகின்றன. ஆட்டிச குறைபாடு என்பது பொதுவாக சுற்றுச்சூழல் அல்லது மரபணு மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் எனக் கூறப்படுகிறது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதித்த குழந்தைகள் மற்றவர்களுடன் பழகுவதில் சிரமப்படுகிறார்கள்.
அவர்களுக்கு என தனி முக பாவனைகள் கிடையாது. மேலும் மற்றவர்களிடம் பேசுவதிலும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகல் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மன இறுக்கம், மன நலன்கள் பாதிப்பு, மனோதத்துவ குணங்கள் கொண்டவர்கள் கவனம் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல் மற்றும் சமூக சூழ்நிலைகள் மற்றும் தொடர்புகளில் அவர்களின் அறிவுசார் மற்றும் உணர்ச்சி வளர்ச்சி தடைபடுகிறது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதித்தவர்களுக்கு நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை என்று சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சில மருத்துவர்கள் எந்த ஒரு வகையான சிகிச்சையும் இரண்டு நோயாளிகளுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறுகின்றனர். இருப்பினும், எந்தவொரு சிகிச்சையின் குறிக்கோளும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பின் அறிகுறிகளைக் குறைப்பது மற்றும் சாதாரண நடைமுறை வாழ்க்கை போல் செயல்படுத்த வைப்பது திறன் மேம்படுத்த உதவும்.
ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு மருந்துகள், குணநலன் சார்ந்த கல்வி, உளவியல் சார்ந்த நுட்பங்கலை கற்பித்தல் ஆகியவற்றின் சமூக தொடர்பு திறன், நேர்மறையான நடத்தை செயல்படுத்துதல் மற்றும் செயல்திறன் மேம்பாடு உள்ளிட்ட வழிகளில் சிகிச்சை அளிப்பது சிறந்த மாற்றத்தை கொண்டு வரும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க : Baba Ramdev Video : அட இவருங்க! - 30 ஆண்டுகள் முந்தைய வீடியோ வெளியிட்ட பாபா ராம்தேவ்!