மேஷம்: மிகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். மனதில் மகிழ்ச்சி பொங்கும். தோட்டத்தில் வேலை செய்வது, செடிகள் நடுவது அல்லது சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். இந்த உலகத்தில் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக மாற்ற விரும்பினால், இதைச் செய்யுங்கள்.
ரிஷபம்: வேலையை முடித்து விட்டு இடத்தை விட்டு வெளியேறத் தயாராகுங்கள். வியாபார ஒப்பந்தங்கள் எளிதில் முடிவடையும். காலையில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும் நீங்கள், நாளின் இறுதியில் சோர்வாக உணரலாம். உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை தவிர்த்தால், எதிர்வரும் நாட்களில் பல மோதல்களை தவிர்க்கலாம்.
மிதுனம்: மதம் மற்றும் சமூக பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கவும், அவற்றைப் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிக்க நேரலாம். உங்கள் கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்துங்கள். இதைத் தவிர, சட்டம், கல்வி, சமுதாய கடமைகள், கலாச்சாரம் போன்ற விஷயங்களில் கலந்துரையாடலாம்.
கடகம்: அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தாலும், உங்களுடைய திறமையை உயர் அலுவலர்கள் முழுமையாக மதிக்காததால் மனம் வருத்தப்படுவீர்கள். அதை மனதின் ஆழத்திற்கு எடுத்துச் செல்லவோ அல்லது சோகமாக இருக்கவோ வேண்டாம். இறுதியில், உறுதியான மனதைரியம் வெற்றி பெறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலை வேளையில், பதற்றமான சூழல் ஏற்படலாம்.
சிம்மம்: நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? சில நற்செய்திகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.அது நன்மைகளை மட்டுமே கொடுக்கும் என்று உறுதியாக தெரிகிறது. இது பணியிடத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். உள்ளார்ந்த திறமைகளுக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும். மேல் அலுவலர்களிடம் இருந்து உற்சாகமூட்டும் வார்த்தைகளும், சக பணியாளர்களிடமிருந்து நல்ல ஆதரவையும் எதிர்பார்க்கலாம்.
கன்னி: பேச்சாற்றலும் ஆக்கப்பூர்வமான திறமைகளும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வீர்கள் என்ற போதிலும், எந்தவித அழுத்தமோ அல்லது சிக்கல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
துலாம்: பெரிய இலக்கு வைத்திருக்கும்போது, சிறிய விஷயங்களை சமாளிப்பது எரிச்சலை உண்டாக்கும். இதனால் உற்சாகத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதன் மூலம் புதிய சிந்தனைகள் தோன்றலாம். கிரகிக்கும் சில விஷயங்கள் சமநிலையில் தக்க வைக்க உதவலாம்.
விருச்சிகம்: விருப்பங்களை அழுத்தமாக, மோதல் போக்குடன் சொல்ல வேண்டியிருக்கும். இருந்தாலும், உங்கள் பற்றிய அபிப்ராயத்தை அது தவறாக சித்தரிக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும். பெரிய அளவிலான திட்டங்களில் பிரச்னை ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்ற தெளிவு அவசியம்.
தனுசு: பணம் எளிதாக கைநழுவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவினங்களை குறைக்க முயலுங்கள். நாள் முழுவதும் நிதி தேவைகளை சமாளிக்க முயற்சித்தாலும், மாலை வேளையில், நேர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படும். அமைதியாக அமர்ந்து ஓய்வெடுக்க விரும்புவீர்கள்.
மகரம்: தீவிரமான காதல் உள்ளம் படைத்தவர். உங்கள் அன்புக்கு உரியவரை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்பவர். இருந்தாலும், கற்பனை உலகத்திலேயே வாழ்வது நல்லதல்ல. ஏனெனில் எல்லா இடங்களிலும் சிக்கல்கள் பின்தொடர்கின்றன. தொழிலதிபராக இருந்தால், உங்களது போட்டியாளர்கள் உங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் உரிய கவனம் தேவை.
கும்பம்: நேரமே போதாது என சொல்வதுபோல், உங்களுக்கு நிறைய வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிர்வாகப் பொறுப்பில் இருந்தால், பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். எனினும் விடாமுயற்சியும், அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும், மாலையில் விருந்துக்கு செல்ல நேரம் ஒதுக்குவீர்கள். ஆற்றல் மிகுந்த நாள்.
மீனம்: பணத்தின் முக்கியத்துவம் தற்போது புரியும். இன்று முழுவதுமே, அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். செலவுகளை குறைத்து மதிப்பிடுவீர்கள். குடும்பத்தைப் பற்றியக் கவலை அதிகரிக்கும். அதேபோல் குடும்பத்தினரும் உங்களுக்கு ஆதரவாக இணக்கமாக செயல்படுவார்கள்.