புதுச்சேரி : அரியாங்குப்பம் அதிமுக தொகுதி தலைவர் ஐயப்பன் அந்த கட்சியிலிருந்து விலகி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏவி சுப்பிரமணியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தனர்.
இதற்கான விழா புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.
புதிய திட்டங்கள் இல்லை
"புதுச்சேரியில் பல பொய்களை சொல்லி பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. பட்ஜெட்டுக்கு ரங்கசாமி தலைமையிலான அரசு வெறும் 25 கோடி ரூபாய் மட்டுமே கடந்த ஆட்சியை விட அதிகமாக பெற்றுள்ளதாக தெரிகிறது".
நாடாளுமன்ற தேர்தல்
"நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அனைவரும் ஒன்றுபட்டு காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி தேடி வரும். எனவே கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும்.கடந்த ஆட்சியில் நாம் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்".
மாநில அந்தஸ்து
"பஞ்சாலைகள் திறப்போம் என்று பாஜகவினர் உறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றார்கள். அதற்கும் தற்போது வழி இல்லை " என நாராயணசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க : கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது'