தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தினோம்.
இதனையடுத்து ஜூலை 12ஆம் தேதிக்குள் 15. 85 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ் தருவதாக ஒன்றிய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
கரோனா தொற்றின் மூன்றாவது அலை மூன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு விளக்கமளித்தது. கரோனா நிதியை அதிகரிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்