ETV Bharat / bharat

வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்கக் கோரிக்கை; பிரதமரை சந்திக்க உள்ள முதலமைச்சர் ஸ்டாலின்! - பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் கோரிக்கை

Chief Minister Stalin in Delhi: மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நிதியை விரைந்து வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளார்.

tn chief minister mk stalin visits flood affected south districts tomorrow
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 12:02 PM IST

Updated : Dec 19, 2023, 1:06 PM IST

டெல்லி: மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பெரும் மழையினால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்தன. வெள்ளம் வடிந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாடு அரசு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கி வருகிறது.

  • Following the unprecedented rains caused by #CycloneMichaung, which affected Chennai and its neighbouring districts earlier this month, the southern districts of Tamil Nadu have now experienced historically high rain over the past few days. This has severely impacted the… pic.twitter.com/Hteiz4Vpiv

    — M.K.Stalin (@mkstalin) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசிடம் நிவாரண உதவி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையடுத்து வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய அரசின் குழுவினர் வந்த ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருந்தனர். இந்நிலையில் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வெள்ள நிவாரண தொகையை விரைந்து வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளார்.

அதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமரைச் சந்திக்க நேரம் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனில் முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் மழை, புயல், வெள்ளம் ஆகியவை குறித்தும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அன்று புயலும், அதன் காரணமாகக் கடுமையான மழையும் ஒரு நாள் முழுவதும் பெய்தது. அதற்கு முன்பே தமிழ்நாடு அரசின் மூலம் அறிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகப் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது. மக்கள் பேராபத்தில் இருந்து காக்கப்பட்டார்கள்.

இதனை ஒன்றிய அரசின் சார்பில் அங்கு வந்த குழுவும் மாநில அரசுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறது. மழை நின்றதும் உடனடியாக நிவாரண பணிகளை நாங்கள் துவங்கி விட்டோம். மறுநாளே போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 95 விழுக்காடு மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் சரிசெய்யப்பட்டது.

புறநகரில் ஒருசில பகுதிகள் நீங்கலாக நான்கு, ஐந்து நாட்களுக்குள் மற்ற அனைத்து பகுதிகளும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன. தண்ணீரில் மூழ்கி இருந்த பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்தோம். அவர்களை மீட்டுப் பாதுகாப்பான பகுதிகளில் சென்று சேர்த்தோம். நானே பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். 20 அமைச்சர்கள், 50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் களத்தில் இருந்தார்கள்.

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். புயலுக்கு முன்பும், புயலுக்கு பின்பும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணத்தால் தான் பாதிப்பு குறைந்தது. உடனடியாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வந்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். தலைமைச் செயலகத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் என்னைச் சந்தித்தார். வெள்ள பாதிப்புகளை சரிகட்ட முதற்கட்டமாக 5 ஆயிரத்து 50 கோடி ரூபாய் தேவை என்று சொன்னேன்.

இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன். எனது கடிதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பிரதமரிடம் கொடுத்தார். ஒன்றிய அரசு இந்த ஆண்டு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ரூ.450 கோடியை வழங்கி இருக்கிறது. இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியைக் கோரி உள்ளோம். ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குழு தமிழ்நாட்டில் மூன்றுநாட்கள் தங்கி ஆய்வு செய்தது. இறுதியாகக் கோட்டையில் வந்து என்னைச் சந்தித்தார்கள்.

முழுமையான சேதத்தைக் கணக்கிட்டு தற்காலிக நிவாரணத் தொகையாக 7 ஆயிரத்து 33 கோடியும், நிரந்தர தீர்வு பணிகளுக்காக 12 ஆயிரத்து 659 கோடியும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன். ஒன்றிய அரசின் நிதி வரட்டும் என்று காத்திருக்காமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை உடனடியாக அரசு அறிவித்தது. 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறோம்.

கடந்த 17ஆம் தேதி அன்று சென்னை வேளச்சேரி பகுதியில் நானே பங்கேற்று இத்தொகையை வழங்கி இருக்கிறேன். மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் நிதியை முழுமையாகப் பெற்றால் தான் முழுமையான நிவாரணப் பணிகளைச் செய்ய முடியும். எனவே பிரதமரை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த 17, 18ஆம் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது.

இதன் காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கடுமையான மழைப்பொழிவு 17, 18 தேதிகளில் ஏற்படும் என்பதைச் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் 17ஆம் தேதி அளித்தது. வானிலை ஆராய்ச்சி மையம் குறிப்பிட்ட மழை அளவிற்குப் பலமடங்கு அதிகமான மழைப்பொழிவு இம்மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டது. எடுத்துக்காட்டாக காயல்பட்டிணத்தில் 94செ.மீ., மழை, அப்பகுதியே வெள்ளக்காடானது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளால் கொட்த் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

மழை குறித்த எச்சரிக்கை தாமதம்: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே தாமதமாகக் கிடைத்தாலும், அதில் தெரிவித்த மழைப்பொழிவை விட அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்ட சூழலிலும் தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது என்பதை இங்கே நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். மழைப்பொழிவு கடுமையான உடனே 8 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ் அலுவலர்கள் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாவட்ட வாரியாக ஐபிஎஸ் அதிகாரிகள் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் வீரர்கள், படகுகள், உபகரணங்கள், 375 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்கள், 275 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் களத்தில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூடுதலாக, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தத் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 230 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதுமட்டுமின்றி நமது இராணுவ வீரர்கள் 168 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு 181 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பெருமழையினையும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் நானும், தலைமைச் செயலாளரும் பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாகவும் தொலைப்பேசி வாயிலாகவும் அவ்வப்போது கண்காணித்து வருகிறோம்.

19-ஆம் தேதியான இன்றும் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தமட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் எந்தவகையில் செயல்பட்டு மக்களைக் காத்தோமோ அதேபோல, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களைக் காக்கும் பணியில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.

அரசு இயந்திரம் முழுமையாக அந்த மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது. இந்த பாதிப்புகளுக்கு உள்ளான மாவட்ட மக்களுக்கான நிவாரணத்தையும் தமிழ்நாடு அரசு செய்தாக வேண்டும். ஆகவே, முதலில் சென்னை பெருவெள்ளத்திற்காக வைக்கப்பட்ட கோரிக்கையுடன் தென் மாவட்ட வெள்ளச் சேதங்களையும் இணைத்து கோரிக்கை வைப்பதற்காகப் பிரதமரிடம் நேரம் கேட்டிருந்தேன். இன்று இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கி உள்ளார்கள். தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முழுமையாகப் பிரதமரிடம் நேரில் நான் வழங்கப் போகிறேன்.

இந்த நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களது வாழ்வாதாரங்களைத் திருப்ப உருவாக்க உடனடி நிவாரணமாகத் தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்க இந்திய பிரதமரிடம் கோர இருக்கிறேன். அதேபோல தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இம்மாத துவக்கத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட அதி கனமழை வெள்ளப் பெருக்கினால் கடும் பாதிப்புக்களைச் சந்தித்தோம்.

இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்துள்ள நிலையில், இவற்றை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்த இருக்கிறேன்.

தென் மாவட்டங்களில் ஆய்வு: தென் மாவட்டங்களில் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “இன்று இரவு பிரதமரைச் சந்திக்க நேரம் கொடுத்திருக்கின்ற காரணத்தால் இரவு பிரதமரைப் பார்த்துவிட்டு நிலவரத்தையெல்லாம் சொல்லிவிட்டு, Memorandum கொடுத்துவிட்டு, நாளை காலை நேரடியாகத் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கும் செல்கிறேன்” என்றார்.

கடந்த காலங்களில் ஒன்றிய அரசிடமிருந்து கோரப்பட்ட நிவாரண நிதி நிலுவையில் உள்ள நிலையில் தற்போது கோரப்பட்ட நிவாரண நிதி உடனடியாக கிடைக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறோம். ஏற்கனவே. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் சொல்லியிருக்கிறோம். பிரதமருக்குக் கடிதம் கொடுத்திருக்கிறோம். இன்றைக்குப் பிரதமரிடத்தில் இதை வலியுறுத்துகிறோம்” என்றார்.

மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதற்கு ஏற்கனவே பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். சென்னையில் இதுவரை 47 வருடங்களாக வராத மழை தென்பகுதியில் 60 ஆண்டு காலமாகச் சந்திக்காத மழை பெய்திருக்கிறது. அதனால் இது எதிர்பாராதது. இருந்தாலும் இதற்காக முன்கூட்டியே என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் நிச்சயம் அரசு செய்யும்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “அது உங்களுக்குப் புரிந்தால் சரி. உங்களுக்குப் புரிந்தால் அதைச் சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.

ஆளுநர் தமிழ்நாட்டில் அலுவலர்களை வைத்துப் பல கூட்டங்கள் நடத்தி வருவது குறித்தும், அதற்குப் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “கரோனா போன்ற பேரிடர் ஏற்பட்டபோது பிரதமர் தான் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது குடியாகத் தலைவர் ஏதாவது செய்திருந்தால், என்ன reaction, அதே reaction-தான் இப்போது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "குழந்தைகளுக்காவது உணவு கொடுங்கள்" ரயிலில் சிக்கிய 500 பேர் தவிப்பு.. மீட்பு நிலவரம் என்ன?

Last Updated : Dec 19, 2023, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.