கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹூக்லியின் பர்சுரா மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) மாலை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கானு டோலூ அடித்துக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் பாஜகவினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். அதில், “சம்பவத்தன்கு கானு மீது பாஜக தொண்டர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலினால் கானு உயிரிழந்து விட்டார்” என்றும் கூறினர். எனினும் இந்தக் குற்றஞ்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கானு மரணம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு? சத்ய பிரத சாகு சூசகம்